பார்த்திபன் சமூக வலைதளப்பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும், நடிகராகவும் இருப்பவர் பார்த்திபன். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் நல்ல வெற்றியடைந்தது.
இதனைத்தொடர்ந்து இவர் இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ”இரவின் நிழல்”. திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் பலரின் பாராட்டுகளை பெற்றது. இந்த படத்தில் ரோபோ சங்கர், வரலட்சுமி சரத்குமார், சகாய பிரகிடா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனையடுத்து இந்த திரைப்படம் ஓடிடி யில் ரிலீசாக தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பார்த்திபன் தனது சமூக வலைதள பக்கத்தில் ” இந்த திரைப்படம் OTT யில் வர காத்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளித்தாலும், தாமதமாவதற்கு மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டு OTT யில் வருகையில் பேராதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.