Categories
தேசிய செய்திகள்

காற்று மாசுபாடு எதிரொலி!…. ICU-ல் அதிகம் அட்மிட் ஆகும் மக்கள்…. மருத்துவர் வெளியிட்ட தகவல்….!!!!

தொழிற்சாலைகள், வாகனபுகை, கார்பன் வெளியேற்றம் உள்ளிட்ட பல காரணிகளால் உலகளவில் காற்று அதிக அளவில் மாசடைந்து வருகிறது. இது இந்தியாவிலும் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக மனிதர்களுக்கு நோய்த் தொற்றுகள், வாழ்நாள் முழுதும் பாதிப்பு ஆகியன ஏற்படுவதுடன் அவர்களின் வாழ்நாள் குறைந்து வருகிறது எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் காற்றுதர குறியீடு அமைப்பு, உலகளவில் மேற்கொண்ட ஆய்வின் பயனாக அண்மையில் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், உலக அளவில் அதிக காற்று மாசுபாடுடைய நகரங்களை உடைய நாடுகளின் வரிசையில் கத்தாருக்கு அடுத்து இந்தியா 2வது இடத்தில் இருக்கிறது. இவற்றில் தீபாவளி நாளில் அதிக மாசுபாடுடைய நகரங்களின் வரிசையில் டெல்லி முதலிடம் பிடித்துள்ளது என தெரிவித்து இருக்கிறது.

இந்தியாவில் மட்டும் 8 நகரங்கள் டாப் 10ல் இடம்பெற்று அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியை சுற்றி இருக்கும் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் வேளாண் கழிவுகளை தீவைத்து எரிக்கும் நிகழ்வு போன்ற காரணிகளாலும் தலை நகர் அதிக பாதிப்புக்குள்ளாகிறது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லி மேதாந்தா மருத்துவமனையின் தலைவர் மற்றும் டாக்டரான அரவிந்த்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது, டெல்லியில் மருத்துவமனைக்கு வரக்கூடிய மக்கள் கண்கள் வறண்டு காணப்படுகிறது. மேலும் அவர்கள் கண்களில் எரிச்சல் ஏற்படுகிறது.

கண்கள் சிவந்து, நீர்கசிந்து மற்றும் மூக்கில் எரிச்சல், உதடுகளில் வித்தியாச சுவையுணர்வு உள்ளிட்ட பொதுவான பாதிப்புகளுடன் வருகின்றனர். நீங்கள் உங்களுடைய நாக்கை தொட்டால் உலோக பொருளை தொட்ட ஒரு சுவையானது ஏற்படும். எங்களது ICU-க்கு நெஞ்சு பாதிப்புகள், நிம்மோனியா பாதிப்பு எனக் கூறி கொண்டு அதிக எண்ணிக்கையிலான மக்கள் வருகின்றனர். காற்று மாசுபாடு அதிகரிக்கும் போது இதுபோல் பாதிப்புகள் அதிகரித்து காணப்படுவதற்கான சான்றுகள், ஆவணப்படுத்தி வைக்கப்பட்ட உண்மையாகவே இருக்கிறது. இதேபோல் வயது முதிர்ந்த பெரியவர்களுக்கு ஸ்டிரோக் பாதிப்பு ஏற்படுவதற்குரிய ஆபத்து 10 மடங்கு அதிகரித்துள்ளது என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |