Categories
சினிமா தமிழ் சினிமா

”சினிமாவில் வாரிசுகள் ஆதிக்கம் குறையவில்லை”…. நடிகை கங்கனா ரணாவத் அதிரடி….!!!

நடிகை கங்கணா ரணாவத் மேற்கத்திய கலாச்சாரம் குறித்த கருத்து தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். இவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை துணிச்சலாக வெளியிட்ட பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இவர் சமீபத்தில்  நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும்போது, ”இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் படங்கள் தான் அதிகம் வருவதாக கூறியுள்ளார். மேலும், காந்தாரா படம் நுணுக்கமான பக்தி மற்றும் ஆன்மீகத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது.

Actress Kangana Ranaut to introduce her boyfriend soon! | விரைவில் காதலரை  அறிமுகம் செய்யப்போகும் நடிகை கங்கனா ரணாவத்! Movies News in Tamil

பொன்னியின் செல்வன் திரைப்படம் சோழர்கள் வரலாற்றை பற்றி எடுத்தது. இந்த இரண்டு படங்களில் இடம் பெற்றுள்ள இந்து தொடர்பான விஷயங்கள் பார்வையாளர்கள் தங்களோடு தொடர்புபடுத்தி பார்க்கின்றனர். இந்தி பட உலகம் மேற்கத்திய கலாச்சாரத்தின் காரணமாக நமது கலாச்சாரத்தை விட்டு விலகியுள்ளதாக கூறியிருக்கிறார்.

மேலும், நடிகர்களை தங்கள் ரோல் மாடலாக வைத்துக் கொள்ளகூடாது எனவும், அதற்கு பதிலாக அப்துல் கலாம், ஸ்ரீராமர் ஆகியோரை ரோல் மாடலாக கொள்ள வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். சினிமாவில் வாரிசுகள் ஆதிக்கம் குறையவில்லை” என அவர் கூறியிருக்கிறார்.

Categories

Tech |