தமிழகத்தில் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டப்போது மாநில அரசுக்கு குடைச்சல் கொடுக்கவே காவல் பின்புலம் போல கொண்ட ஒருவரை மத்திய பாஜக அரசு நியமித்துள்ளதாக விமர்சிக்கப்பட்டது. திமுக கூட்டணி கட்சிகள் ஆர்.என். ரவி நியமித்ததுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் திமுக தரப்பில் இருந்து எந்தவித சலசலப்பும் இல்லாமல் இருந்தது. இருப்பினும் சமீப காலமாக ஆளுநருக்கு திமுக தரப்புக்கு இடையே உரசல்கள் ஏற்பட்டு வருகிறது. நீட் தேர்வு விவகாரத்தில் இந்த மோதல் போக்கு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து ஆர்.என்.ரவி தமிழக அரசின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகள் புகார் கூறி வருகிறது. அரசு நிகழ்வுகள், பல்கலைக்கழக நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஆளுநர் அமைப்பின் சித்தாந்தத்தை பரப்பில வருவதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை திரும்ப பெற வேண்டும் என்று கோரி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுத திமுக முடிவு செய்துள்ளது. குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட உள்ள அறிக்கையில் கையொப்பமிடுமாறு திமுக மற்றும் திமுகவின் தோழமைக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலா அழைப்பு விடுத்துள்ளனர். இது குறித்து அவர் விடுத்துள்ள அழைப்பில்0ஒரே எண்ணம் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, தமிழக ஆளுநரை உடனடியாக வாபஸ் பெறுவது தொடர்பாக குடியரசு தலைவர்கள் அனுப்பும் கடிதத்தில் அண்ணா அறிவாலயம் தமிழகத்தில் நேரில் சென்று படித்து கையொப்பம் விடுமாறு திமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவித்துள்ளனர்.