தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரையை பதித்தார். இந்நிலையில் கார்த்தி நடிப்பில் தமிழில் வெளியான கைதி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், இப்படத்தை போலோ என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்கின்றனர். இப்படத்தில் ஹீரோவாக அஜய் தேவ்கன் நடிக்கிறார்.
அதன்பிறகு நரேன் கதாபாத்திரத்தில் நடிகை தபு நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஃபிலிம்ஸ் மற்றும் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து படத்தை தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அமலாபால் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தகவலை நடிகை அமலா பால் தன்னுடைய அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
AMALA PAUL JOINS AJAY DEVGN’S ‘BHOLAA’… #AmalaPaul – known for her work in #Tamil, #Telugu and #Malayalam films – will appear in sp app in #AjayDevgn's fourth directorial #Bholaa… Stars #AjayDevgn and #Tabu. pic.twitter.com/gVQpstfkCN
— taran adarsh (@taran_adarsh) November 1, 2022