தமிழகத்தின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் விவசாயிகளிடமிருந்து நேரடியாக பசும்பாலை கொள்முதல் செய்து அதனை பொது மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றது. அது மட்டுமல்லாமல் பால் சார்ந்த நெய், பால்கோவா போன்ற பல்வேறு பொருட்களையும் உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் பால் பொருட்களில் சிறந்த ஆப்பர்களும் வழங்கப்பட்டது கடந்த வருடம் திமுக தலைமையிலான ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்துள்ளது.
இந்த விலை குறைவால் ஆவின் விற்பனை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் ஆவின் நிறுவனம் ஆவின் விலை இன்னும் 90 நாட்கள் வரை பயன்படுத்தும் புதிய பாலை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த பாலை எந்தவித குளிர்சாதன வசதியும் இல்லாமல் மூன்று மாதங்கள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது நிலை வரும் மழைக்காலத்தினால் பொதுமக்கள் பல்வேறு காரணங்களால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடிவதில்லை.
இந்த மாதிரியான நேரத்தில் நாம் ஒருமுறை இந்த பாலை வாங்கி வைத்து அதிக நாட்கள் பயன்படுத்தி கொள்ளலாம் அது மட்டுமல்லாமல் நீண்ட தூர பயணம் செய்பவர்களுக்கு இந்த பால் ஏற்றது என தெரிவிக்கின்றனர். மேலும் இந்த ஆவின் டிலைட் 500 மில்லி பால் பாக்கெட் விலை 30 ரூபாய் ஆகும் எந்தவித வேதிப்பொருட்களும் கலப்படம் செய்யாமல் நவீன தொழில்நுட்ப முறையில் தயாரிக்கப்பட்டிருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.