கனடா நாட்டில் பால் மற்றும் பாலிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களுக்கு விலை உயர வாய்ப்புள்ளது.
கனடா நாட்டில் பால் கொள்முதல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பாலிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களின் விலை உயர உள்ளதாக கனேடிய பால் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பாலின் விலையானது 2.2% அல்லது லிட்டருக்கு இரண்டு செண்டுகள் வரை உயர்த்த ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக நேற்று கனேடிய பால் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பாலின் விலை உயர்வானது
வருகிற 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. இங்கு உற்பத்தி செலவு அதிகரிப்பே இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. மேலும் பால் விலை உயர இருப்பதால் பிற பால் தயாரிப்புகளான வெண்ணெய், பாலாடை கட்டி, ஐஸ்கிரீம் மற்றும் யோகர்ட் ஆகியவற்றின் விலையும் உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.