உத்தரபிரதேச மாநில வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலை ஓட்டி ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. முகலாய மன்னர் ஔரங்கசீப் உத்தரவின் படி கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு அந்த மசூதி கட்டப்பட்டதாக ஹிந்துக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள சிருங்கார் கௌரி, கணபதி, ஹனுமன், நந்தி சிலைகளை தினந்தோறும் வழிபட அனுமதி அளிக்குமாறு 5 பெண்கள் உள்ளிட்ட சிலர் கொடுத்த வழக்கை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஞானவாபி மசூதியில் உள்ள பாதாள அறைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று ஹிந்துக்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது எதிர் தரப்பு வழக்கறிஞர் தரப்பில், மசூதியில் பாதாள அறைகள் அமைந்துள்ள பகுதி தொழுகை மற்றும் சடங்கு செய்யும் பகுதி என்பதால் அப்பகுதியில் தோண்டுவது முறையல்ல என்று தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணை நவம்பர் 11ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.