Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

16 அடி நீளம் மலைப் பாம்பா….? பீதியில் தோட்டத் தொழிலாளர்கள்…. துரித நடவடிக்கையில் வனத்துறையினர்….!!!!

நீலகிரி மாவட்டத்தில் அள்ளூர்வயல் பகுதியில் தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தேயிலை தோட்டத்தில் அதிக அளவிலான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென அங்கு மலை பாம்பு ஒன்று வந்துள்ளது. இதனை கண்ட தொழிலாளர்கள் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர். இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலின் பேரில் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்து அருகில் உள்ள தெய்வ மலை வனப்பகுதியில் பத்திரமாக விட்டுள்ளனர். அதன் பின்பு தொழிலாளர்கள் நிம்மதி அடைந்து தங்களுடைய பணிக்கு தொடங்கியுள்ளனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது “16 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஆக்ரோஷத்துடனும் இருந்தது. இதனை நாங்கள் கவனத்துடன் கையாண்டு பின்னர் அடர்ந்த வனப்பகுதியில் மலைப்பாம்பு பாதுகாப்பாக விடப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |