நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பகுதியில் தனியார் தோட்டத் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இரண்டு மாத சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் நேற்று காலை வேலைக்கு வந்த தொழிலாளர்கள் சம்பளத்தை உடனே வழங்குமாறு தோட்ட அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசாரும் தோட்ட நிர்வாக பிரதிநிதிகளும் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கப்படும் என நிர்வாகத்தினர் உறுதியளித்ததன் பேரில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.