Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

தொடர்ந்து சாராயம் விற்றதாக 2 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள கூடாநகரம் கிராமத்தில் வினோத், வசந்த் என்பவர் வசித்து வருகின்றனர். கடந்த மாதம் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் வசந்த், வினோத் ஆகிய இருவரையும் சாராயம் விற்றதாக கைது செய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்துள்ளனர். மேலும் வினோத், வசந்த் மீது சாராயம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

எனவே போலீஸ் சூப்பிரெண்டு ராஜேஷ்கண்ணன்தொடர்ந்து சாராயம் விற்று வந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி காவல்துறையினர் இருவரையும் குண்டச்சத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

 

Categories

Tech |