Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

குடியாத்தம் நகராட்சியில் 144 பகுதி சபை உறுப்பினர்கள் தேர்வு… தீர்மானம் நிறைவேற்றம்…!!!!!

குடியாத்தம் நகர மன்ற அவசர கூட்டம் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்றுள்ளது இதில் துணைத் தலைவர் கொடி மூர்த்தி, ஆணையர் ஏ திருநாவுக்கரசு, பொறியாளர் போன்றோர் கலந்து கொண்டுள்ளார். மேலும் இதில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் இந்த கூட்டத்தில் கிராமங்களை போன்று நகரங்களில் பகுதி சபை கூட்டங்களை நடத்த வார்டுகளில் குழுக்களை நியமனம் செய்து செயலாளர்கள் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றியும் இந்த குழு தேர்ந்தெடுக்கப்பட்ட 144 பேர் நியமனம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் செம்மையாக நடைபெற பகுதி சபை கூட்டங்கள் நடத்த உத்தரவிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் அழைப்பாளராக கலந்து கொண்ட அமலு விஜயன் எம்எல்ஏ பேசும்போது நகரமன்ற உறுப்பினர்கள் இந்த குழுக்களுடன் இணைந்து மக்களின் அடிப்படை பிரச்சினைகளை கண்டறிந்து உடனடியாக நகர மன்ற தலைவர் அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கவனத்திற்கு கொண்டு வந்து அடிப்படை பிரச்சினைகள் தீர்க்க வேண்டும்.

இதற்காக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் இந்த வருடம் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து நகராட்சியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த 55 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் வருடங்களில் தொடர்ந்து அடிப்படை வசதிகள் மேம்படுத்த குடியாத்தம் நகராட்சிக்கு நிதி ஒதுக்கப்படும் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சபை கூட்டங்கள் நடத்த தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினருக்கு நியமன சான்றிதழை எம்எல்ஏ நகரம் என்று தலைவர் போன்றோர் வழங்கியுள்ளனர்.

Categories

Tech |