Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திடீரென பெய்த சாரல் மழை…. அவதிக்குள்ளான பொதுமக்கள்….!!

திருவண்ணாமலையில் பெய்த சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று தொடர்ந்து பலத்த மழை பெய்தது. காலையிலேயே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதன்பின் சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. காலை 10 மணியிலிருந்து தொடர்ந்து திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழையும், சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது.

இதனால் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள், மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் ஆகியோர் சிரமப்பட்டனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Categories

Tech |