Categories
சினிமா தமிழ் சினிமா

“புனித் ராஜ்குமார் கடவுளின் பிள்ளை”…. நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு…!!!!

புனித் ராஜ்குமாருக்கு நேற்று கர்நாடக பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது

கன்னட சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் புனித் ராஜ்குமார். இவர் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி உயிரிழந்தார். இவரின் திடீர் உயிரிழப்பு ரசிகர்கள், திரையுலகினர் என அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. இந்த நிலையில் அவரின் களைப்பணி மற்றும் சமூக சேவை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அவருக்கு உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என கர்நாடக மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

இதையடுத்து இவ்விருதை வழங்குவதற்காக நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் ரஜினிகாந்த் விருது வழங்கும் விழாவிற்கு தனி விமானம் மூலம் பெங்களூருக்கு சென்றார். இந்த நிலையில் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடகா ரத்னா விருது நேற்று வழங்கப்பட்டது. இவ்விருதை ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்டிஆர் வழங்க புனித் ராஜ்குமார் மனைவி விருதை பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, நடிகர் புனித் ராஜ்குமாருக்கு விருது வழங்கும் இந்த தினத்தில் மழை வந்து கொண்டிருக்கின்றது. இதன் மூலம் அவர்களது குடும்பத்திற்கு இறைவன் அருள் இருக்கின்றது. அவர் இறைவனின் பிள்ளை என பேசி இருக்கின்றார்.

Categories

Tech |