Categories
சினிமா தமிழ் சினிமா

“சில வினாடிகள் கவனம் சிதறினால், கதையே புரியாமல் போகும்”… கருத்து தெரிவித்த ஐமா பட இயக்குனர்…!!!!!

சில வினாடிகள் கவனம் சிதறினால், கதையை புரியாமல் போகும் என ஐமா பட இயக்குனர் கருத்து தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ராகுல் ஆர்.கிருஷ்ணா இயக்கியுள்ள திரைப்படம் ஐமா. இத்திரைப்படத்தை தமிழ் எக்ஸாடிக் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ஹீரோவாக யூனஸ் நடிக்கின்றார். இவருக்கு ஜோடியாக எல்வின் ஜூலியட் நடிக்கின்றார்.

இந்த நிலையில் இத்திரைப்படம் குறித்து இயக்குனர் கூறியுள்ளதாவது, பல தடைகளை தாண்டி இந்த கதையை படமாக கொண்டு வந்திருக்கின்றேன். படம் பார்ப்பவர்கள் சில வினாடிகள் கவனம் சிதறி காட்சிகளை பார்க்காமல் விட்டாலே படத்தின் கதை புரியாமல் போக வாய்ப்பிருக்கின்றது. இந்த படம் சுவாரசியம் நிறைந்த படமாக இருக்கின்றது. படத்தில் ஒன்பது கதாபாத்திரங்கள் சுற்றி கதை நகர்கின்றது எனத் தெரிவித்திருக்கின்றார்.

Categories

Tech |