Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஐசிசி டி20 தரவரிசை : பாக் வீரர் ரிஸ்வானை பின்னுக்கு தள்ளி…… உலகின் நம்பர் ஒன் பேட்டரானார் சூர்யகுமார்..!!

சமீபத்திய ஐசிசி தரவரிசையின்படி, இந்திய அணிவீரர் சூர்யகுமார் யாதவ், டி20 போட்டிகளில் உலகின் நம்பர் ஒன் பேட்டர் ஆனார்.

ஆஸ்திரேலியாவில் தற்போது ஐசிசி டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை பதிவு செய்து 6 புள்ளிகளுடன் கிட்டத்தட்ட அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்து விட்டது என்று சொல்லலாம். இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் துருப்பு சீட்டாக இருக்கிறார். கடந்த சில காலங்களாகவே அவர் இந்திய அணிக்கு பல போட்டிகளில் அதிரடியாக விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார். அதேபோல இந்த டி20 உலக கோப்பையிலும் அற்புதமாக பேட்டிங் ஆடி வருகிறார்.

இந்திய மிஸ்டர் 360 டிகிரி வீரர் என அழைக்கப்படும் இவர் டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 15 ரன்கள், நெதர்லாந்துக்கு எதிராக 51 ரன்கள், தென்னாபிரிக்கா நிக்க எதிராக 68 ரன்கள் மற்றும் நேற்று நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான போட்டியிலும் 30 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.. அதில் முதல்முறையாக இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 863 ரேட்டிங் புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.

தற்போது அவர் பாகிஸ்தான் துவக்க வீரர் முகமது ரிஸ்வானை (842) பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார். முகமது ரிஸ்வான் கடந்த சில காலமாகவே முதலிடத்தில் தொடர்ந்து நீடித்து வந்த நிலையில், தற்போது அவர் 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.. அதேபோல நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே 792 புள்ளிகளுடன் தனது 3ஆவது இடத்தை தக்க வைத்துள்ளார். பாபர் அசாம் 780 புள்ளிகளுடன் 4 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.. மேலும் நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் சிறப்பாக ஆடி 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். விராட் கோலி (10ஆவது 638 புள்ளி) முதல் 10 இடங்களுக்குள் உள்ள மற்றொரு இந்தியர் ஆவார். மற்றபடி எந்த ஒரு இந்திய வீரரும் முதல் 10 இடங்களுக்குள் இல்லை.. 32 வயதான சூர்யகுமார் இந்திய அணிக்கு தனது சிறப்பான பங்களிப்பை வழங்கி வருவதால், அவர் தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பார் என்று நாம் எதிர்பார்க்கலாம்..

 

 

Categories

Tech |