Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் 11-ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம்”… மாவட்ட ஆட்சியர் அறிக்கை…. இதோ முழு விவரம்…!!!!!!

தூத்துக்குடியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக ஆட்சியர் தெரிவித்திருக்கின்றார்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வ.உ.சி துறைமுகம் திருச்செந்தூர் ரோடு ரவுண்டானாவில் தற்போது மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் தற்போது 32 ராட்சத கான்கிரீட் தூண்கள் பொருத்தும் பணி நடைபெறுகின்றது. இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகின்றது. இந்தப் பணி நேற்று முதல் தொடங்கி பதினொன்றாம் தேதி வரை நடைபெறுகின்றது. இதன் காரணமாகவே போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகின்றது.

நேற்று முதல் வருகின்ற 6-ம் தேதி வரை பாலத்தின் வடக்கு புறத்தில் வேலை நடைபெறுவதால் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இருந்து வரும் ரயில்வே மேம்பாலங்களில் சாலைகள் அடைக்கப்படுகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் காமராஜ் கல்லூரி சாலை வழியாக திருச்செந்தூர் ரவுண்டானா வரும் அனைத்து வாகனங்களும் மாற்று பாதையாக பீச் ரோடு, ரோஸ் பூங்கா வழியாக துறைமுக சபை விருந்தினர் விடுதி ஸ்பிக், டாக் இணைப்பு சாலை வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையை அடையலாம்.

மதுரையிலிருந்து வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை வழியாக தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் மற்றும் திருச்செந்தூர் செல்லும் கனரக வாகனங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் பாலத்தின் தெற்கு பகுதியில் இருக்கும் சர்வீஸ் ரோட்டின் வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. திருச்செந்தூரில் இருந்து வரும் அனைத்து வாகனங்களுக்கும் பாலத்தின் தெற்கு பகுதியில் இருக்கும் சர்வீஸ் ரோட்டை பயன்படுத்திக் கொள்ளலாம்.

திருச்செந்தூரில் இருந்து வ உ சி துறைமுகத்திற்கு செல்லும் ஸ்பிக், டாக், துறைமுக சபை விருந்தினர் இல்லம் வழியாக செல்ல வேண்டும். வருகின்ற 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை பாலத்தில் தெற்கு பகுதியில் தூண்கள் அமைக்கும் பணி நடைபெறுகின்றது. அப்போது திருச்செந்தூரில் இருந்து வ உ சி துறைமுகத்திற்கு செல்லும் வாகனங்கள் ஸ்பிக், டாக், துறைமுக சபை விருந்தினர் இல்லம் வழியாக செல்ல வேண்டும்.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இருந்து வரும் ரயில்வே மேம்பாலம் வழியாக வரும் வாகனங்கள் திருச்செந்தூர் ரவுண்டானா வரும் அனைத்து வாகனங்களுக்கும் மாற்று வழியாக பீச் ரோடு, ரோஸ் பூங்கா வழியாக துறைமுக சபை விருந்தினர் விடுதி, ஸ்பிக், டாக் இணைப்புச் சாலை வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையை அடையலாம்.

தூத்துக்குடி வ உ சி துறைமுக சபையிலிருந்து பாலத்தை கடந்து செல்லும் வாகனங்களுக்கு பாலத்தின் வடக்கு புறத்தினை பயன்படுத்தி மதுரை மற்றும் நெல்லை சாலைக்கு செல்லலாம். மதுரையில் இருந்து வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை வழியாக தூத்துக்குடி வ உ சி துறைமுகம் மற்றும் திருச்செந்தூர் செல்லும் கனரக வாகனங்கள் பாலத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் தெற்கு பகுதி ரூட்டை பயன்படுத்தலாம்.

திருச்செந்தூரில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் பாலத்தின் தெற்கு பகுதியில் ஏற்கனவே இருக்கும் சாலையை பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது மேம்பாலம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பொதுமக்கள் மேற்கொண்ட மாற்று வழியை பயன்படுத்தி மேம்பால பணிகள் நடைபெறும் இடத்தை தவிர்த்து மற்ற இடங்களில் போக்குவரத்து நெருக்கடிகள் ஏற்படுத்தாமல் ஒத்துழைப்பு வழங்கமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |