Categories
மாநில செய்திகள்

JUST IN: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாதா…? சற்றுமுன் வெதர்மேன் ட்வீட்…!!!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியதாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி புதுச்சேரியில் 5 நாள்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக நேற்று மற்றும் நேற்று முன்தினம் பள்ளிகளுக்கு ஒரு சில மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டது.

அதேபோல இன்றும் விடுமுறை அளிக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பில்லாததால், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் இன்று விடுமுறையை எதிர்பார்க்க வேண்டாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சற்றுமுன் ட்வீட் செய்துள்ளார். மழை தற்போது தென் தமிழகம் பக்கம் திரும்பியுள்ளதால், அடுத்த 2 நாட்களுக்கு அங்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளார். விடுமுறையை எதிபார்த்த மாணவர்களுக்கு இது ஏமாற்றமே!

Categories

Tech |