Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“திருப்பூரில் 11 ஊராட்சிகளில் கிராம சபா கூட்டம்”… 24 தீர்மானங்கள் நிறைவேற்றம்…!!!!!

திருப்பூர் மாவட்டத்தில் மடத்துக்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட 11 ஊராட்சிகளில் உள்ளாட்சிகள் தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட 11 ஊராட்சிகளில் உள்ளாட்சிகள் தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் முதல்வருக்கு நன்றி தெரிவித்தல், பள்ளி குழந்தைகள் இடைநிறுத்தம் தவிர்த்தல் உள்ளிட்ட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கிராம சபா கூட்டத்தில் கூட்டுறவு சார்பதிவாளர், வங்கி செயலர், தோட்டக்கலை உதவி அலுவலர், கிராம நிர்வாக அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

Categories

Tech |