இனி வரும் ஆப்பிள் சாதனங்களில் டைப் சி போர்ட்டுகளே வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்பனையாகும் எலக்ட்ரானிக் சாதனங்கள் அனைத்திலும் டைப் சி போர்டை கட்டாயமாகும் சட்டத்தை ஐரோப்பிய ஆணையம் கொண்டு வந்துள்ளது.
இந்த சட்டம் 2024 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வர உள்ள நிலையில் பெரும்பாலான ஆண்ட்ராய்டு சாதனங்கள் டைப் சி போர்டுக்கு மாறியுள்ளன.ஆப்பிள் மட்டும் இது தொடர்பாக எதுவும் விளக்கம் அளிக்காமல் இருந்த நிலையில் இனி வரும் ஐ ஃபோன்கள் டைப் சி மாடலில் தான் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.