Categories
தேசிய செய்திகள்

அசாமில் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து கொலை – 10ம் வகுப்பு மாணவர்கள் 7 பேர் கைது!

அசாமில் 12 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டு மரத்தில் தொடங்கவிடப்பட்ட பகீர் சம்பவம் அங்கு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அசாம் மாநிலம் பிஸ்வநாத் மாவட்டத்தின் சக்லா கிராமத்தில் கடந்த சனிக்கிழமை 12 வயது சிறுமி மரத்தில் தூக்கிலிடப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது பிரேத பரிசோதனையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இந்த சம்பவம் அம்மாநிலத்தையெ உலுக்கியது. வெள்ளிக்கிழமை இரவு சிறுமியை பார்ட்டி என சில மாணவர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த தகவல் கிடைக்க அருகில் உள்ளவர்களிடம் நடத்திய விசாரணையில் பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்ட 7 பேரும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்று தெரியவந்தது. போலீசார் அந்த மாணவர்களை தேடினர். போலீசார் தேடுவதை அறிந்த 7 பேர் தப்பியுள்ளனர். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் 7 மாணவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

பார்ட்டி என்று அழைத்துச் சென்று, அந்த சிறுமியை அவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் கொலை செய்து மரத்தில் தொடங்கவிட்டுள்ளாதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான மாணவர்கள் தற்போது பொதுத்தேர்வு எழுதி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடைபெற உள்ளது.

Categories

Tech |