விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் வீட்டில் அசல் கோலாறு செய்த செயலுக்கு மன்னிப்பு கூறியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 – ல் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி நல்ல விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அசல் கோலாறு இறுதி கட்டம் வரை செல்ல தகுதி உள்ள போட்டியாளராக உள்ளே சென்றார். இளம் பாடகரான இவர் மீது ஆரம்பத்தில் நல்ல எண்ணம் இருந்தது. பின்னர் இவர் நாளுக்கு நாள் செய்யும் செயல்கள் கோபத்தை உண்டாக்கும் விதமாக அமைந்தது.
https://www.instagram.com/tv/Ckc3dLPg_WV/?utm_source=ig_web_copy_link
இவர் எலிமினேட் செய்த பிறகு இந்நிகழ்ச்சியை பற்றிய ஏதாவது பதிவு செய்வார் என்று நினைத்த போது இதுவரை செய்யவில்லை. தற்போது இந்நிகழ்ச்சியை பற்றி அசல் கோலாறு கூறியதாவது, “பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போது உறவினர் வீட்டிலிருப்பது போன்று உணர்ந்தேன். மேலும் ரசிகர்களுக்கு என்னுடைய செயல் கோபத்தை உண்டாக்கினால் அதை நான் மாற்றிக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.