Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பாம்பு கடித்து இறந்த மனைவி…. நினைவாக வீடு கட்டி சிலை வைத்த லாரி ஓட்டுநர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

கணவர் மனைவியின் நினைவாக புதிய வீடு கட்டி மெழுகு சிலை வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள கிளாக்காடு பகுதியில் லாரி ஓட்டுநரான இருசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நீலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கஸ்தூரி, லோகேஸ்வரி, ரேஷ்மா என்ற மூன்று மகள்கள் இருக்கின்றனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வீட்டில் இருந்த நீலா பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

அடிப்படை வசதி இல்லாத வீட்டில் இருந்ததால் மனைவி உயிரிழந்ததை நினைத்து இருசன் மன உளைச்சலில் இருந்துள்ளார். பின்னர் கடந்த ஒரு ஆண்டாக முயற்சி எடுத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய வீட்டை இருசன் கஷ்டப்பட்டு கட்டியுள்ளார். மேலும் மனைவியின் நினைவாக ஒரு லட்ச ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட மெழுகு சிலையை தனது புதிய இல்லத்தில் இருக்கும் வரவேற்பு அறையில் வைத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |