Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!…. நடப்பு நிதியாண்டில் வேளாண், உணவு பொருள் ஏற்றுமதி 25% அதிகரிப்பு…. வெளியான தகவல்…!!!

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடும் போது நடப்பு நிதியாண்டில் இரண்டாவது காலாண்டு வரை வேளாண் மற்றும் பதபட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதி 25% அதிகரித்துள்ளது என்று வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளியல் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல்-செப்டம்பர் காலகட்டத்தில் வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி 13,771 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் 11056 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடும் போது நடப்பு நிதியாண்டில் 2ஆம் காலங்களில் பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி 42.42%, தானியங்கள் மற்றும் இதர பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி 29.36% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

அதனைத் தொடர்ந்து பாசுமதி அரிசி ஏற்றுமதி கடந்த ஆறு மாதங்களில் 37.36% வளர்ச்சியடைந்துள்ளது. இறைச்சி பால் மற்றும் கோழி பண்ணைப் பொருட்களின் ஏற்றுமதி 10.29% அதிகரித்துள்ளது. மேலும் பால் பொருட்களின் ஏற்றுமதி 58%, கோதுமை ஏற்றுமதி 136% அதிகரித்துள்ளது. இது குறித்து வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி ஆணையத்தின் தலைவர் எம்.அங்கமுத்து கூறியது, தரமான வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை உறுதி செய்ய விவசாயிகள் ஏற்றுமதியாளர்கள் மற்றும் பதப்படுத்தும் உணவு தொழில் முனைவர் என அனைத்து தரப்பினர்களும் இணைந்து பணியாற்றி வருகிறோம். இந்தியாவின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் சிறந்த வளர்ச்சியை நிலை நிறுத்துவதை இலக்காக கொண்டு செயல்படுகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |