Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கடத்தப்பட்ட பிரபல ரவுடி…. பணத்தை இழந்தவர்கள் தான் காரணமா…??? போலீஸ் விசாரணை…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பிருந்தாவன் ரோடு பகுதியில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூபதி என்ற மகன் உள்ளார். இவரது பெயர் அழகாபுரம் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இருக்கிறது. இந்நிலையில் பூபதியும் அவரது நண்பர் பிரவீன் குமார் என்பவரும் இரவு நேரத்தில் கோரிமேடு பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் வந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் பூபதியையும், பிரவீன் குமாரையும் கடத்தி சென்றனர். இதனை அடுத்து ஐந்து ரோடு பகுதியில் வைத்து காரை நிறுத்திய போது பிரவீன்குமார் கீழே இறங்கி தப்பி ஓடி விட்டார்.

பின்னர் நடந்த சம்பவம் குறித்து பிரவீன்குமார் அழகாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பூபதி பலரிடமிருந்து பணம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பூபதியை கடத்தி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |