தேசிய தொழில்நுட்ப ஜவுளி சார்ந்த 20 திட்டங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் செயல்படும் சிறப்பு இழைகள், விவசாய ஜவுளி மற்றும் ஸ்மார்ட் டெக்ஸ்டைல்ஸ் போன்றவைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் 74 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது இந்திய வளர்ச்சிக்கான புதிய உத்வேக திட்டம் என்றும் மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன் பிறகு உத்தி பயன்பாட்டு பகுதி, புவியியல் சார்ந்த ஜவுளி, ஆக்டிவ் வேர் ஜவுளி, ஸ்மார்ட் டெக்ஸ்டைல்ஸ் என்கிற எண்ம ஆடைகள், விவசாய ஜவுளி, சிறப்பு இழைகள், விளையாட்டு ஆடை ஜவுளி, பாதுகாப்பு உடைகள் போன்ற 20 திட்டங்களுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த புதன்கிழமை மதிய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயல் பல்வேறு துறை அமைச்சர்களின் அதிகாரிகளுடன் இணைந்து ஜவுளி தொடர்பான தன்னுடைய கருத்துக்களை விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பகிர்ந்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது ஜவுளி துறையில் கொண்டு வர வேண்டிய புதிய விதமான திட்டங்கள் தொழில்நுட்பங்கள் போன்று பல்வேறு விதமான விஷயங்கள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டது. மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஐஐடிகள், அரசு நிறுவனங்கள், தொழிலதிபர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களை சேர்ந்த இந்தியாவின் முக்கிய தொழில் அதிபர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.