Categories
சினிமா தமிழ் சினிமா

தாரை தப்பட்டை கிழியட்டும்…! இன்று மாலை 6.30 மணிக்கு…. வாரிசு முக்கிய அப்டேட்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார்.அது மட்டுமல்லாமல் விஜய் உடன் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துவரும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் “வாரிசு” படத்தின் முதல் பாடலின் promo இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த பாட்டு விஜய் பாடிய குத்துப்பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Categories

Tech |