Categories
தேசிய செய்திகள்

குருவாயூர் கோவில் விழா…. “இந்த சொல்லை தவிர்க்க வேண்டும்”…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் கோயிலில் நடைபெறும் நிகழ்வில் கோடாதி விளக்கு என்ற சொல்லை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் இன்று கேரளா உயர்நீதிமன்றம் அறுவத்தி உள்ளது. இது குறித்து திருச்சூர் மாவட்ட பொறுப்பு நீதிபதி ஏ.கே. ஜெய சங்கரன் நம்பியார் வழங்கிய பரிந்துரைகளின் பேரில் கேரளா நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், அரசியலமைப்பு சட்டத்தின்படி மத சார்பற்ற ஜனநாயக அமைப்புகளான நீதிமன்றங்கள் குறிப்பிட்ட மதத்தை ஊகவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட முடியாது.

அதனை தொடர்ந்து கோடாதி விளக்கு என்னும் வருடாந்திர சமய நிகழ்வு குருவாயூர் கோயிலில் சாவக்காடு முன்சீப் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் உறுப்பினர்களின் தனிப்பட்ட முறையில் கூட்டாக இணைந்து விழாவை ஏற்பாடு செய்வதில் எந்தவித ஆட்சேபமும் இல்லை. ஆனால் கோடாதி விளக்கு என்னும் சொல்லை பயன்படுத்துவது நம்முடைய மாநிலத்தில் நீதிமன்றங்கள் சார்பில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்ற பிம்பத்தை உருவாக்கியது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Categories

Tech |