வாட்ஸ் அப் நிறுவனம் இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் சுமார் 26.85 லட்சம் கணக்குகளை தடை செய்திருக்கிறது.
வாட்ஸ் அப் என்னும் சமூக ஊடக நிறுவனத்தை பயன்படுத்தும் மக்கள் அதிகம். இந்நிலையில் இந்த வருடத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் வாட்ஸப் நிறுவனமானது, இந்தியாவில் சுமார் 26.85 லட்சம் பயனர்களை தடை செய்திருக்கிறது. இவற்றில் 8.72 லட்சம் கணக்குகளை தடை செய்திருக்கிறது.
நிறுவனமானது, பயனாளிகளிடமிருந்து புகார்கள் தெரிவிக்கப்படுவதற்கு முன்பே நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் வாட்ஸ்அப் நிறுவனத்திற்குரிய கணக்கு, +91 என்று தொடங்கும் தொலைபேசி எண் மூலமாக அடையாளப்படுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 23.28 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் தடை செய்யப்பட்டது. அதனோடு ஒப்பிட்டால் செப்டம்பர் மாதத்தில் இந்த விகிதமானது 15% அதிகம். ஏதேனும் குற்றம் நடந்த பிறகு அதற்கு தீர்வு காண்பதற்கு பதிலாக குற்றம் நடப்பதற்கு முன்பு அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும். அது தான் சிறந்தது என்று தாங்கள் நம்புவதாகவும், தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்துவதாகவும், தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 ஆம் வருடத்தின் கீழ் இந்திய மாதாந்திர அறிக்கையில் வாட்ஸ் அப் நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது.