Categories
மாநில செய்திகள்

பெண்களுக்காக போராட்டம் நடத்த!…. அவங்களுக்கு தகுதி இல்ல!…. அமைச்சர் மனோ தங்கராஜ் ஸ்பீச்…..!!!!

தி.மு.க பிரமுகர் பா.ஜ.க-வில் உள்ள பெண்உறுப்பினர்களை அவதூறாக பேசியது குறித்து பல பேரும் தங்களது கண்டனத்தை பதிவுசெய்தனர். இதுகுறித்து பாஜக சார்பாக ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. அப்போது அண்ணாமலை கைதானார். இச்சூழலில் நாகர்கோவிலில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைதுறை அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களை சந்தித்து பேசியதாவது “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு மாநில அரசுக்கு களங்கம் விளைவிக்கும் அடிப்படையில் கவர்னர்கள் செயல்படுவதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

கவர்னர்கள் தங்களது எல்லையை அறிந்து, சம்பந்தப்பட்ட மாநிலத்தின் நன்மைக்காக பாடுபடவும். ஆனால் அவர்கள் அதனை செய்கிறார்களா..? என்பதை மக்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர். இதற்கிடையில் கவர்னர்களை யார் செயல்படுத்துகிறார்கள் என்பதும் மக்களுக்கு தெரியும். குஜராத்தில் வீட்டிற்குள் நுழைந்து ஆண்களை கொன்றுவிட்டு கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் விடுதலையாகி வந்த போது வரவேற்பு அளித்த பாரதீய ஜனதா கட்சியினர், பெண்களுக்காக போராட்டம் நடத்துவதற்கு தகுதியற்றவர்கள் ஆவார்கள். தி.மு.க. பிரமுகர் பேசியது குறித்து துணை பொதுச்செயலாளர் கனிமொழி வருத்தம் தெரிவித்த பிறகும், தங்களை விளம்பரபடுத்துவதற்காக அண்ணாமலை செயல்படுவது ஏற்புடையதல்ல” என்று பேசினார்.

Categories

Tech |