மீனம் ராசி அன்பர்களே..! இன்று தாயின் அன்பும், ஆசியும் உங்களுக்கு பலமாக கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பணியாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். பெண்கள் புத்தாடை, நகை வாங்குவீர்கள். உறவினர்களால் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். குடும்ப செலவுகள் அதிகரிக்கும். ஆயுதங்கள், நெருப்புகள் போன்றவற்றை பயன்படுத்தும் பொழுது ரொம்ப கவனமாக பயன்படுத்துங்கள். கணவன்-மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டியவை வந்து சேரும். வீட்டிற்கு தேவையான பொருட்களையும் நீங்கள் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு எந்தவித தடையும் இல்லாமல் முன்னேற்றமான சூழல் இருக்கும். இருந்தாலும் பாடங்களை படிக்கும் பொழுது ரொம்ப கவனமாக படியுங்கள், படித்ததை எழுதிப் பாருங்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்வதற்கு இரண்டு நிமிடம் தியானம் மேற்கொண்டு பாடங்களைப் படியுங்கள். அதுபோலவே தேர்வு முடியும் வரை காரமான உணவு வகைகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
இரவில் தூங்கச் செல்வதற்கு முன் பசும்பால் அருந்தி விட்டுச் செல்வது ரொம்ப நல்லது. உங்களுக்கு பாடங்கள் நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்