ஈரோடு மாவட்டத்தில் உள்ள திருவேங்கடம்பாளையம் புதூரில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தா(57) என்ற மனைவி உள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ராஜா இறந்து விட்டதால் சாந்தா பெருந்துறை சந்தைப்பேட்டை வணிக வளாகத்தில் தங்கி இருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். இவருடைய மகன் கார்த்திக்கும் தாயுடன் இரவு நேரத்தில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாய் மகன் இருவரும் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகினர். அவ்வபோது இருவரும் சண்டை போடுவதும் உண்டு.
நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் குடிபோதையில் இருந்த போது யாரோ ஒருவர் சாந்தாவின் தலையில் கட்டையால் அடித்து கொலை செய்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த இடத்திலிருந்து சிறிது தூரத்தில் ரத்தக்கரை படிந்த கட்டை கிடந்ததால் சாந்தா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு சாந்தாவை கொலை செய்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.