விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று எந்த ஒரு காரியத்தையும் செய்யும் பொழுது ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செய்யுங்கள். திட்டமிட்ட பணிகளில் தாமதம் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுபவத்தை நீங்கள் கண்டிப்பாக பாதுகாக்கவேண்டும். சுமாரான பணவரவு தான் கிடைக்கும். புத்திரர்களின் கவனக்குறைவான விதமாகத்தான் சரிசெய்யவேண்டும்.. ஒவ்வாத உணவுகளை தயவுசெய்து முற்றிலும் தவிர்த்து விடுங்கள். பணிச்சுமை காரணமாக திடீர் கோபம் கொஞ்சம் தலை தூக்கலாம், கவனமாக செயல்படுங்கள். எதிர்பார்த்த பணம் ஓரளவு கையில் வந்து சேரும்.
குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். மீண்டும் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக தான் இருக்க வேண்டும். கணவன் மனைவிக்குள் அவ்வப்போது சின்னச் சின்னதாக கருத்து வேற்றுமை வரக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று மாணவச் செல்வங்கள் கல்வியில் கடுமையாக உழைத்துதான் பாடங்களை படிக்க வேண்டும் படித்த பாடத்தை தயவுசெய்து எழுதிப் பாருங்கள். அது மட்டும் இல்லை இன்று மனதை அமைதியாக வைத்துக் கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். இரண்டு நிமிடம் தியானம் இருந்த பின்னர் பாடங்களை படிப்பது ரொம்ப நல்லது.
மனதில் நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும். அதுபோலவே தேர்வு முடிவு வரை காரமான உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். இரவில் தூங்கச் செல்வதற்கு முன் பசும்பால் அருந்தி விட்டு செல்வது ரொம்ப நல்லது படித்த பாடத்தை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்வதற்கு இது உதவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிஷ்டமான திசை கிழக்கு
அதிர்ஷ்ட எண் 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு மற்றும் நீல நிறம்