Categories
மாநில செய்திகள்

என்னாது!…. “பாஜகவை வீழ்த்த கூடிய மாபெரும் சக்தி இவர்தான்”…. அமைச்சர் அதிரடி பேச்சு….!!!!

மயிலாடுதுறையில் மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் அவை தலைவர் கேஜி.சீனிவாசன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யானநாதன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக கழக பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் மெய்யாநாதன், பாஜகவை வீழ்த்த கூடிய மாபெரும் சக்தியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவெடுத்துள்ளார்.

அதனை தொடர்ந்து திராவிட மாடல் என்ற தத்துவத்தின் அடிப்படையில் தமிழகத்தில் சிறந்த ஆட்சியை வழங்கி வருகிறார். சட்டப்பேரவை தொகுதியில் தீர்க்கப்படாத 10 பிரச்சனைகளை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு காண உள்ளார். நாதல் படுகை, முதலை மேடு ஆகிய ஆற்றுப்படுகையில் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியில் தமிழக முதல்வர் தீவிரமாக கண்காணித்து வருகிறார். மேலும் 13 மாதங்களில் மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில், திமுகவில் இணைய ஆர்வமாக உள்ளவர்களை கட்சியின் இணைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |