Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நா ரெடி.! இந்தியாவை தோற்கடித்தால்….. “நான் ஜிம்பாப்வே பையனை கல்யாணம் பண்ணுவேன்”…. பாக் நடிகை ட்விட்…. கலாய்க்கும் நெட்டிசன்கள்.!!

இந்தியாவை அற்புதமாக வீழ்த்தினால், நான் ஜிம்பாப்வே பையனை திருமணம் செய்து கொள்வேன் என்று பாகிஸ்தான் நடிகை ஷேகர் ஷின்வாரி ட்விட் செய்துள்ளார். 

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன் குரூப் 2 புள்ளி பட்டியலில் முதலிடத்தில் (6 புள்ளிகள்) உள்ளது. அதேசமயம் பாகிஸ்தான அணி 3 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. எனவே அந்த அணியின் அரை இறுதி வாய்ப்பு கேள்விக்குறியாக உள்ளது. இன்று நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். அதேபோல வங்கதேசத்திற்கு எதிரான போட்டியிலும் அதிக ரன்ரேட்டில் வெற்றி பெற வேண்டும். மறுபக்கம் தென்னாப்பிரிக்கா அணி கடைசி போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக தோல்வி அடைந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். அதற்கு வாய்ப்பு குறைவு..

இதற்கிடையே இந்தியா தனது கடைசி சூப்பர் 12 ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை 6ஆம் தேதி எதிர்கொள்கிறது. இந்நிலையில் இந்தியா – ஜிம்பாப்வே இடையேயான கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே  அணி வெற்றி பெற்றால் அந்த நாட்டின் ஒருவரை நான் திருமணம் செய்து கொள்வேன் என பாகிஸ்தான் நடிகை ஷேகர் ஷின்வாரி ட்விட் செய்துள்ளார். எப்போதும் இப்படி சவால் விட்டு அதை எதையுமே கடைப்பிடிக்க மாட்டார் இந்த நடிகை. எனவே இந்த முறையும் அவர் அதனை கடைப்பிடிக்க போவதில்லை என்றாலும், அவர் ட்விட்டின் கீழ் நெட்டிசன்கள் கிண்டலாக அப்படியா நான் கட்டிக் கொள்கிறேன் நான் ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்தவர் தான் ரெடியாக இருக்கிறேன் என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் அவர் ட்விட் செய்த பழைய ட்விட்டை டேக் செய்து கிண்டல் செய்து வருகின்றனர்.

முன்னதாக அக்டோபர் 23ஆம் தேதி பாகிஸ்தான் – இந்தியா மோதலின் போது இந்த நடிகை ட்விட்டில், இன்று இந்தியா வெற்றி பெற்றால், நான் ட்விட்டரை என்றென்றும் நீக்கிவிடுவேன், திரும்ப வரமாட்டேன் என்று பதிவிட்டிருந்தார். ஆனால் இன்னும் அவர் ட்விட்டரில் இருந்து விலகவில்லை. இதனை குறிப்பிட்ட ஒருவர், அது சரி ஆனால் இது (ட்விட்டரில் இருந்து விலகுவது) எப்போது நடக்கும் என்று கலாய்த்துள்ளார்.

https://twitter.com/abeyjayaar/status/1588042629316370432

Categories

Tech |