Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு… இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பு.. வாக்குவாதம் வேண்டாம்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று மாறுபட்ட கருத்து உள்ளவர்களிடம் விலகி இருப்பது ரொம்ப நல்லது. தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். மிதமான ஆதாயம் கிடைக்கும். பெண்கள் தாய்வீட்டு உதவி கேட்டு பெறுவார்கள். இஷ்ட தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் கண்டும் காணாமல் செல்வது தான்  இன்று உங்களுக்கு நன்மையை கொடுக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது ரொம்ப நல்லது.

கோபத்தை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். அனைவரிடமும் அன்பாக பேசுங்கள். அது மட்டும் இல்லைஇன்று  யாருக்கும் பணத்தைக் கடனாகக் கொடுக்க வேண்டாம். இந்த விஷயத்திலும் கவனமாக இருங்கள் மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம்  ஏற்படும். அதுமட்டுமில்லை உங்களுடைய மனதை நீங்கள் அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள், அதற்கு இரண்டு நிமிடங்கள் தியானம் இருந்த பின்னர் பாடங்களை படிப்பது ரொம்ப நல்லது. தேர்வு முடியும் வரை காரமான உணவு வகைகளை உண்ண வேண்டாம். அதேபோல் தூங்கச் செல்வதற்கு முன் பசும்பால் அருந்தி விட்டுச் செல்வது மிகவும் நல்லது.

படித்த பாடத்தை நினைவில் வைத்துக் கொள்வதற்கு இது உதவும். இன்று  முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று  முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே கொடுப்பதாகவே இருக்கும்.

அதிர்ஷ்ட திசை-தெற்கு

அதிர்ஷ்ட எண் 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |