நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த மாணவர் யுவராஜ் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இது குறித்து தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கலா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டால் எந்த ஆதாரமும் இன்றி ஆசிரியர்களுக்கு எதிராக குற்றத்தை சாட்டக் கூடாது. பிள்ளைகள் மீதான கடமையையும், பொறுப்பையும் உணர்ந்து வீட்டிலும் சமூகத்திலும் அவர்களை பாதுகாத்து கண்காணிப்பது பெற்றோரின் கடமை என்று அதிரடி தீர்ப்பளித்துள்ளார்.