சிம்மம் ராசி அன்பர்களே.! இன்று கவனக்குறைவான செயலால் சிரமம் கொஞ்சம் ஏற்படலாம். தொழில் வியாபாரம் செழிக்க மாற்று உபயோகம் உங்களுக்கு பயன் கொடுக்கும். அளவான வருமானம் கிடைக்கும்., பெண்கள் நகை பணம் இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். மாணவர்கள் படிப்பை தவிர பிற விவாதம் ஏதும் பேச வேண்டாம். மாணவச் செல்வங்கள் யாரிடமும் எந்தவித வாக்குவாதங்களும் செய்யவேண்டாம். அதேபோல பாடங்களை கொஞ்சம் கடுமையாகப் படியுங்கள். படித்ததை எழுதிப் பாருங்கள் மனதை எப்பொழுதும் அமைதியாகவே வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு இரண்டு நிமிடம் தியானம் மேற்கொள்ளுங்கள்.
அதுமட்டுமில்லை தேர்வு முடியும் வரை காரமான உணவு வகைகளை தவிர்த்து விடுங்கள். இரவில் தூங்கச் செல்வதற்கு முன் பசும்பால் அருந்தி விட்டு செல்வது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், உங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் இளம் மஞ்சள் நிறம்