Categories
மாநில செய்திகள்

“சாத்தான்குளம் லாக்கப் கொலை வழக்கு”…. கூட்டு சதியா?…. சிபிஐ தாக்கல் செய்த புது மனு….!!!!!

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீது கூட்டுசதி பிரிவில் வழக்குபதிவு செய்ய அனுமதி கோரி சிபிஐ புது மனுவை தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து 120 பி மற்றும் விடுபட்ட பிரிவுகளின் கீழ் குற்றசாட்டு பதிவுசெய்ய அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ புது மனுவை இன்று தாக்கல் செய்துள்ளது. சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுதும் பரவலாக பேசப்பட்டது.

இவ்வழக்கு ஆரம்பத்தில் விசாரணைக்கு வரும் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவேண்டும் என்று நீதிபதி தன் கருத்தை பதிவுசெய்திருந்தார். எனினும் இந்த வழக்கு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் 9 பேர் மீது கூட்டுச் சதி பிரிவுகள் கீழ் வழக்கு பதிவுசெய்ய அனுமதி கோரி புது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப் பத்திரிகை அடிப்படையில் கூடுதல் பிரிவுகளில் குற்றசாட்டு பதிவுசெய்ய அனுமதி வேண்டும் எனவும் சிபிஐ தெரிவித்துள்ளது.

Categories

Tech |