Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…நிதானத்தை கடைபிடியுங்கள்..போட்டிகள் அதிகரிக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று எல்லாவற்றையும் நீங்கள் திறம்பட செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். பேச்சில் மட்டும் கொஞ்சம் நிதானத்தை பின்பற்றுங்கள். எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். லாபம் சுமாராகவே இருக்கும். சேமிப்பு பணம் திடீர் செலவு கொஞ்சம் ஏற்படும். பணியாளர்கள் பணிச்சுமை கொஞ்சமாவது கூடும்.வளர்ப்புப் பிராணிகளிடம் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு கோபத்தை கொஞ்சம் தூண்டும் மிகவும் கவனமாக பேசுவது வாக்குவாதத்தை தவிர்ப்பது ரொம்ப நல்லது.

இன்று கணவன்-மனைவிக்குள் திடீர் மன வருத்தங்கள் ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தினர் இடம் கொஞ்சம் அனுசரித்து செல்வது நல்லது. நீண்டதூரப் பயணங்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும். அதே போல காதலர்களுக்கு இன்று சிறப்பான நாளாகவே  அமையும். மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் சிறிதேனும் தடைகள் இருப்பின் கொஞ்சம் கடுமையாக உழைத்துதான் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். கடிதம் எழுதிப் பாருங்கள் படிப்பதற்கு முன் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள இரண்டு நிமிடம் தியானம் செய்யுங்கள் அதேபோல தேர்வு முடியும் வரை காரமான உணவுகளை தவிர்த்துவிடுங்கள்.

பசும் பாலை அருந்தி செல்வது  ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சைநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்

Categories

Tech |