Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க வருத்தப்படாத தீங்க….! ஒருவேளை அவரே “குரங்கா” இருக்கலாம்….. ஆறுதல் சொன்ன அமைச்சர்…!!!!

கடந்த மாதம் 27ஆம் தேதி பாஜகவினர் தமிழக அரசு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கோவை கார் வெடிப்பு சம்பந்தம் குறித்து உங்களிடம் சில ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்தீர்கள். அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கண்டனம் தெரிவித்ததோடு தேசிய புலனாய்வு முகைமை முதலில் விசாரிக்க வேண்டிய நபர் நீங்கள் தான் என்று கூறி இருக்கிறாரே? என்று கேள்வி எழுப்பினார்கள் .

அதற்கு பதில் அளிக்க மறுத்த அண்ணாமலை செய்தியாளர்களை, மரத்தின் மீது குரங்கு தாவுவதை போன்று எதற்காக சுற்றி சுற்றி என்னிடமே வருகிறீர்கள். ஊர்ல இருக்கிற நாய் பேய் சாராயம் விக்ரவனுக்கு எல்லாம் நான் பதில் சொல்லனுமா என்று கோபமாக கூறினார். பின் அங்கிருந்து கிளம்பி சென்றார். இந்த பேச்சுக்கு தற்போது பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளது. அதாவது அமைச்சர் செய்தியாளர்களையும் அமைச்சரையும் தரக்குறைவாக பேசியதாக தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது,

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மனோ தங்கராஜிடம் அண்ணாமலை தொடர்ந்து பத்து பத்திரிகையாளர்களை விமர்சனம் செய்து வருவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பதிலளித்த அவர் பத்திரிகையாளர்களை குரங்கு என்று அண்ணாமலை கூறியிருக்கிறார். அதற்கு பத்திரிகையாளர்கள் வருத்தப்பட்டார்கள். ஆனால் நீங்கள் வருத்தப்படாதீர்கள். சிலர் தங்களை வைத்துதான் மற்றவர்களை ஒப்பிடுவார்கள். அவர் ஒருவேளை அப்படி இருந்தால் கூட சொல்லியிருப்பார் என்று ஆறுதல் கூறியுள்ளார்.

Categories

Tech |