ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய செயல்களில் திறமை வெளிப்படும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச்செல்வார்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். கூடுதல் பணவரவு கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். பெண்கள் தாய்வீட்டு பெருமையை நிலை நாட்டுவார்கள். தேவையற்ற பிரச்சினைகளில் தலையீடுவதை தவிர்ப்பது நல்லது. தேவையான உதவிகள் தாமதமாகவே கிடைக்கும். உடன்பிறந்தோர் உறவு பலப்படும் உங்களுக்கு நல்ல உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.
பயணங்கள் வெற்றி பெறும் வகையில் அமையும். லாபத்திற்கு இன்று எந்தவித பிரச்சினையும் இல்லை. உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இன்று இருக்கும். இன்று மாணவச் செல்வங்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள். தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழல் இருக்கும். அதே போல பாடங்களை படிக்கும் முன் இரண்டு நிமிடம் தியானம் இருந்தபின் பின்னர் பாடங்களை படிப்பது ரொம்ப சிறப்பு. தேர்வு முடியும் வரை காரமான உணவுகளை தவிர்த்துவிடுங்கள். இரவில் தூங்கச் செல்லும் பொழுது பசும் பால் அருந்துவது ரொம்ப நல்லது.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்