தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்களின் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்த விஷால் தற்போது லத்தி மற்றும் மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் தன்னுடைய குடும்பத்துடன் காசிக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றார். அதன்பின் நடிகர் விஷால் பிரதமர் மோடியை பாராட்டி ஒரு ட்வீட் பதிவை செய்திருந்தார். அதில் அன்புக்குரிய பிரதமர் அவர்களுக்கு நான் காசிக்கு சென்றேன். அங்கு புனிதமான கங்கை நீரை எனக்கு தொடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.
நீங்கள் காசியில் கோவிலை புதுப்பித்து அனைவரையும் தரிசனம் செய்யும் வகையில் மாற்றியதற்காக உங்களை கடவுள் ஆசீர்வதிப்பார் என்று பதிவிட்டு இருந்தார். இந்த பதிவுக்கு பிரதமர் நரேந்திர மோடியும் பதிலளித்திருந்தார். இன்னிலையில் நடிகர் விஷாலின் ட்வீட் பதிவை பிரகாஷ்ராஜ் தற்போது தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஷார்ட் ஓகே அடுத்து என்ன என்று பதிவிட்டுள்ளார். அதாவது நடிச்சது போதும் அடுத்து என்ன என்று பங்கமாய் கலாய்க்கும் வகையில் பதிவிட்டு இருகப்பதாக நெட்டிசன்கள் கூறுகிறார்கள். மேலும் நடிகர் பிரகாஷ்ராஜின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Shot Ok…. Next ??? … #justasking https://t.co/uybmBFVSwZ
— Prakash Raj (@prakashraaj) November 3, 2022