மேஷம் ராசி அன்பர்களே..! இன்று பேச்சில் நிதானத்தை பின்பற்ற வேண்டும். தொழில் வியாபாரம் நடைமுறை சுமாரான அளவில் இருக்கும். திடீர் செலவு சேமிப்பு கொஞ்சம் கரையும், பணியாளர்கள் சக ஊழியர்களும் கருத்துவேறுபாடு கொள்ள நேரிடும். பெண்கள் ஆடம்பர எண்ணத்துடன் செயல்படுவார்கள். வாகனத்தில் செல்லும் பொழுது மிக வேகத்துடன் செல்லுங்கள். இன்று பணவரவு ஓரளவு சிறப்பை கொடுக்கும். அரசு மூலம் லாபம் ஏற்படும். மற்றவர்கள் செயல்களால் உங்களுக்கு திடீர் கோபம் கொஞ்சம் உண்டாகலாம். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும்.
வீண் செலவை குறைப்பது ரொம்பவே நல்லது. பிடிவாதத்தை விட்டு விடுவதும் ரொம்ப நல்லது. இன்று அறிவுத்திறன் ஓரளவு சிறப்பாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் தடைபட்ட காரியங்கள் ஓரளவே சாதகத்தை கொடுக்கும். இன்று ஆலயம் சென்று வாருங்கள் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும் இருந்தாலும் கொஞ்சம் கூடுதலாக முயற்சிகளை செய்து மேற்கொண்டு பாடங்களைப் படியுங்கள் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். பள்ளிக்கு செல்லும் முன்பு இரண்டு நிமிடம் தியானம் இருந்து பின்னர் படிப்பை தொடங்குவது ரொம்ப சிறப்பு. உங்களுடைய மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்.
அதேபோல் மாணவக் கண்மணிகள் தேர்வு முடியும் வரை காரமான உணவு வகைகளை தவிர்த்து விடுங்கள். இரவில் தூங்கச் செல்வதற்கு முன் பசும் பால் அருந்துவது ரொம்ப சிறப்பு. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்