வாடகைதாய் பிரச்சனை குறித்து நடிகை வரலட்சுமி பேசியுள்ளார்.
பிரபல நடிகையான வரலட்சுமி சரத்குமார் வாடகத்தாய் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். வாடகைத்தாய் பிரச்சனை என்பது ஒரு பெரிய சிக்கலான விஷயமே கிடையாது. இதில் நடிகர்கள் சம்பந்தப்பட்டதால் தான் பெரிதாகிவிட்டார்கள் என வரலட்சுமி கூறியுள்ளார். இவர் யசோதா படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, இதுபோன்ற கதையும் கதாபாத்திரங்களும் எப்படி எழுதினார்கள் என்பது தான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது குறித்து நான் இயக்குனர்களிடம் கேட்டேன். கதையின் போக்கில் தான் என்னுடைய எதிர்மறை தன்மை வெளியாகும்.
எனக்கும் சமந்தாவுக்கும் இடையில் இருக்கும் உறவே பார்வையாளர்களுக்கு இடையே ஆர்வமூட்டுவதாக இருக்கும். சமந்தாவை போல பெரிய ஆக்சன் காட்சிகள் எனக்கு இல்லை. மிகவும் அமைதியான கதாபாத்திரம் தான். எனக்கு நல்ல கதாபாத்திரம் கிடைக்கும் போது எனக்கு நானே அதை சவாலாக எடுத்துக் கொள்கின்றேன். என்னுடைய கதாபாத்திரம் சமந்தாவுக்கு இணையாக பயணித்துக் கொண்டே இருக்கும். யசோதாவிற்கு யாருடைய உதவியாவது அவளுடைய வாழ்க்கையில் வேண்டுமென்ற நிலையில் இருக்கும்போது தான் நான் கதையில் நுழைவேன். இக்கதை ஒரு அறிவியல் புனைவு. இந்த திரைப்படத்தில் வாடகை தாய் என்கின்ற முறை சரியா? தவறா? என விவாதிக்கவில்லை. இப்படியும் மனிதர்கள் இருக்கின்றார்கள் என்பதை சமூகத்திற்கு வெளிகாட்டுவதே படத்தின் நோக்கமாகும் எனக் கூறியுள்ளார்.