Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எந்திரத்தை சிறைபிடித்த விவசாயிகள்…. புறவழிச்சாலை அமைக்க தொடர் எதிர்ப்பு…. தஞ்சையில் பெரும் பரபரப்பு….!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு பகுதியில் தியாகராஜர் சமாதி மற்றும் புகழ் பெற்ற கோவில்கள் அமைந்துள்ளது. இந்தப் பகுதிக்கு செல்வதற்கான சாலைகள் மிக குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதேபோல் கண்டியூர் போன்ற பகுதிகளிலும் சாலை குறுகலாக இருப்பதினால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது. இதனால் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை அடுத்து திருவையாறு கண்டியூர் பகுதிகளில் அரசூரில் இருந்து விளாங்குடி வரை சாலையை இணைக்கும் வகையில் எட்டு கிலோமீட்டருக்கு புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சாலை அமைப்பதற்கு மத்திய அரசு சார்பில் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. இதனை அடுத்து புறவழிச்சாலைகான நிலங்களில் அளவீடு செய்து கல்களும் ஊன்றப்பட்டுள்ளது. ஆனால் அங்கு விவசாயத்திற்கான நிலங்கள் உள்ளதால் புறவழிச் சாலையை தவிர்க்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். மேலும் அவர்கள் பல கட்டங்களாக போராட்டத்தை தொடர்ந்தனர்.

இருப்பினும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்த வலியுறுத்தி தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் புறவழிச்சாலை அமைக்கும் பணி பொக்லைன் எந்திரங்கள் மூலம் நேற்று மேற்கொள்ளப்பட்டது. அப்போது பொக்லைன் எந்திரத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு கருப்பு கொடி ஏந்தி வயல்களில் இறங்கி “புறவழிச்சாலையால் எங்கள் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது. இதனால் உடனடியாக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர். இந்த போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |