பிரிட்டன் நாட்டு இளவரசி டயானாவும் – பாகிஸ்தான் மருத்துவர் ஹஸ்னட் கானும் இரண்டாடுகள் காதலித்த நிலையில் ஏன் இறுதிவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.
டயானாவுக்கும், சார்லஸுக்கும் கடந்த 1996-ல் விவாகரத்து நடந்தது. இந்நிலையில் 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கார் விபத்தில் டயானா உயிரிழந்துள்ளார். டயானா விவாகரத்துக்கு முந்தைய ஆண்டான 1995-ல் லண்டன் ராயல் பிராம்டன் மருத்துவமனையில் இதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை மருத்துவரான ஹஸ்னட் கானை டயானா சந்தித்துள்ளார். ஏனெனில் சார்லஸின் நண்பருக்கு அந்த மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை நடந்தது. அவரை காண டயானா அங்கு செல்லும் போது ஹஸ்னட் கானை சந்தித்தார். இந்நிலையில் அவர்களுக்கிடையே நட்பு ஏற்பட்டது, பின்னர் இது காதலாக மாறியது.
டயானா இறப்பு தொடர்பாக 2004-ல் நடந்த விசாரணையின் போது ஹஸ்னட் கான் கூறியதாவது, “ஒரு சமயம் மருத்துவமனையிலிருந்து நான் வெளியே கிளம்பும் போது டயானா என்னிடம், எங்கே செல்கின்றாய் என கேட்க நான் சில புத்தகங்களை சேகரிக்க ஸ்ட்ராட்ஃபோர்டிலுள்ள என் மாமாவின் வீட்டிற்குச் செல்கிறேன்” என்று நான் சொன்னேன். அதன் பின்னர், என்னுடன் வருகிறாயா என கேட்க வருகிறேன் என டயானா சொன்னார். இதன் பின்னர் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டு அது ரிலேஷன்ஷிப்பாக மாறியது என்று கூறியுள்ளார்.
கான் சந்தித்த ஒரு பெரிய பிரச்சனை ஊடக வெளிச்சம் தான், அவர் எங்கு டயானாவுடன் சென்றாலும் ஊடகம் பின் தொடர்ந்திருக்கிறது. நாங்கள் திருமணம் செய்துகொள்வது பற்றிய எனது முக்கிய கவலை என்னவென்றால், டயானா யார் என்ற காரணத்தால் என் வாழ்க்கை நரகமாகிவிடும். ஏனெனில் நான் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ முடியாது என்று எனக்குத் தெரியும், நாங்கள் குழந்தை பெற்றெடுத்தால் கூட நான் அவர்களை எங்கும் அழைத்துச் செல்லவோ அல்லது அவர்களுடன் சாதாரண விஷயங்களைச் செய்யவோ முடியாது என்பதை உணர்கிறேன்.
இதனை அடுத்து டயானா தான் தன்னுடனான உறவை முறித்து கொண்டதாக கான் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த முடிவில் யாரும் தலையிடவில்லை என டயானா என்னிடம் சொன்னார், ஆனால் இதில் வேறு யாரோ இருப்பதாக பலமாக சந்தேகிக்கிறேன் என்று கூறினேன். இது குறித்து கானின் தந்தை மருத்துவர் ரஷித் முன்னர் கூறியதாவது, “கான் டயானாவை திருமணம் செய்து கொள்ள போவதில்லை. நான் அவளை திருமணம் செய்து கொண்டால், எங்கள் திருமணம் ஒரு வருடத்திற்கு மேல் நீடிக்காது. நாங்கள் கலாச்சார ரீதியாக ஒருவருக்கொருவர் மிகவும் வேறுபட்டவர்கள் என கான் தன்னிடம் கூறியுள்ளதாக” ரஷித் கூறியுள்ளார். இதற்கிடையில் டயானா ஹஸ்னட்டை மிகவும் காதலித்து வந்தார். தனக்குத் தேவையான அனைத்தையும் அவர் எனக்குக் கொடுத்துள்ளார் என நண்பர்களிடம் கூறியதாக ஒரு தகவல் உண்டு. இதோடு கானுக்காக இஸ்லாமிற்கு மாறுவதைக் கருத்தில் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.