சமீபத்தில் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக ஜி.பி.முத்து கலந்து கொண்டார். இவர் சோசியல் மீடியா ரசிகர்கள் மத்தியில் சமூக வரவேற்பு பெற்றவர். பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஜி.பி.முத்து 2 வது வாரத்தின் இறுதியில் யாரும் எதிர்பாக்காத நிலையில் தனது குடும்பத்தினர் ஞாபகம் இருப்பதாக கூறி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். கடைசி வரை மற்றபோட்டியாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜி.பி.முத்து 2 வது வாரத்தில் வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் ஓமை கோஸ்ட் டிரைலர் வெளியீட்டு விழாவில் ஜி.பி. முத்து கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “ரொம்ப சந்தோஷமாக இருக்கு இதுதான் என்னுடைய முதல் படம். இயக்குனரிடம் நடிக்க பயமா இருக்குன்னு சொன்னேன். அதற்காக அவர், கவலைப்படாதீங்க சொல்றபடி நடிங்கனு என்று சொன்னார். சன்னி லியோன் யாருன்னு அப்போது எனக்கு தெரியாது. நிறைய கமெண்டெல்லாம் வரும், ஆனாலும் எனக்கு தெரியாது. அவர் நடித்த படத்தை எல்லாம் காட்டி இவர் தான் என்று இயக்குனர் சொல்லிக் கொடுத்தார். மேலும் சன்னி லியோன் கூட நடிச்சிட்டேன். அடுத்து என்னோடு பெரிய ஆசை நயன்தாரா, சிம்ரன் கூட நடிக்கும் என்பது தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.