தஞ்சை மாவட்டத்தில் பள்ளியக்ரஹாரம் பகுதியில் ரேவதி என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் பகல் 12 மணிக்கு வெண்ணாற்றங்கரைக்கு அருகே ரேவதி நடந்து சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து அவர் திடீரென ஆற்றுக்குள் இறங்கி வெகுநேரமாக நின்று கொண்டிருந்தார். இதனை கண்டதும் வழியாக சென்றவர்கள் அவரை வெளியே வருமாறு கூறியுள்ளனர்.
ஆனால் அவர் வெளியே வர மறுத்துள்ளார். இது குறித்து அவருடைய குடும்பத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் ரேவதியின் குடும்பத்தினர் அங்கு விரைந்து வந்து அவரை வெளியே வருமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர் வெளியே வரவில்லை மேலும் யாராவது அவரை அழைத்து செல்வதற்கு பக்கத்தில் சென்றாலும் அவர் மீது தண்ணீரை வாரி இறைத்துள்ளார்.
இதனால் அவரை அப்படியே விட்டு விட்டனர். ஆனால் ரேவதி சிறிதும் தளராமல் விடிய விடிய தண்ணீரில் நின்றுள்ளார். நேற்று பகல் 12:00 மணி ஆகியும் அவர் தண்ணீரை விட்டு வெளியே வரவில்லை. இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி மேயர் ராமநாதன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரேவதியை வெளியே வரும்படி கூறியுள்ளார். ஆனால் அதற்கு அவர் செவி சாய்க்கவில்லை. மேலும் ரேவதி நின்று கொண்டிருந்த இடம் கருவேற மரங்களும் சேரும் சகுதிமாக இருந்ததால் யாராலும் அவ்வளவோ எளிதாக அங்கு செல்ல முடியவில்லை.
இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றல் நின்று கொண்டிருந்த ரேவதியை டியூபில் உட்கார வைத்து கரைத்து தூக்கி வந்தனர். இதனை அடுத்து அவரிடம் விசாரணை நடத்திய போது சம்பவம் நடந்த அன்று ரேவதி நடந்து வந்து கொண்டிருக்கும் சமயத்தில் அவருடைய கழுத்தில் உள்ள தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து குடும்பத்தாரிடம் தெரிவித்தும் யாரும் அதனை கண்டு கொள்ளவில்லை. இதனால் அவர் மனம் வெறுத்து ஆற்றில் இறங்கியதாக கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ரேவதி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் அவருடைய குடும்பத்தினர் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தண்ணீரில் அதிக நேரம் நின்றதால் அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.