ஜேர்மனி 49 யூரோ பயணச்சீட்டு திட்டம் கூடிய சீக்கிரம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேர்மனியின் கூட்டாட்சி அரசாங்கம் மற்றும் 16 மாநிலங்களின் தலைவர்கள் புதன்கிழமை அன்று நுகர்வோர் மீதான நிதி அழுத்தத்தை குறைக்கும் நோக்கில் பல முக்கிய நடவடிக்கைகளுக்கு உடன்பட்டு ஒப்புதல் அளித்துள்ளது.இதனை அடுத்து, கார்பன் உமிழ்வைக் குறைத்து மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்தை சமாளிக்க வேண்டும். அத்துடன் குடிமக்களுக்கு உதவும் எண்ணத்தில், ஜேர்மனியில் ஒரு மாதத்திற்கு 49 யூரோக்கள் ($48) நாடு தழுவிய போக்குவரத்து டிக்கெட்டை ஜனவரி மாதம் முதல் அறிமுகப்படுத்தும் என்று போக்குவரத்து அமைச்சர் வோல்கர் விஸ்சிங் நேற்று தெரிவித்துள்ளார்.
Deutschlandticket என்று அழைக்கப்படும் இந்த பயணசீட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த சுமார் 3 பில்லியன் யூரோக்கள் செலவாகும். இதற்கு கூட்டாட்சி மற்றும் மாநில அரசாங்கங்கள் நிதியளிக்கும். மேலும், அதிகரித்து வரும் எரிசக்தி விலைகள் மற்றும் பணியாளர்களின் செலவுகளை சமாளிக்க ஆண்டுக்கு ஒரு பில்லியன் யூரோக்கள் கூடுதலாக வழங்குவதாகவும் ஜேர்மன் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. மேலும் 49 யூரோ மாதாந்திர போக்குவரத்து டிக்கெட், பயணிகள் நாடு முழுவதும் குறுகிய மற்றும் நடுத்தர தூர பொது போக்குவரத்தை குறைந்த செலவில் பயன்படுத்த உதவும்.